உதயம் அமைப்பினருக்கும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் (DATA) அமைப்புக்கும் இடையில் இடமபெற்ற சந்திப்பு.
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : பொது அமைப்புக்கள் பிரிவு : விளையாட்டு
...
விபரம் :
மட்டக்களப்பு மாவட்டத்தின் விழிப்புலன் பாதிக்கப்பட்டோருக்காக தனித்துவமாக இயங்கிவரும் உதயம் அமைப்பினருக்கும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் (DATA) அமைப்புக்கும் இடையில் கடந்த (18-05-2017) வியாழக்கிழமை அன்று சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
சென்ற ஆண்டு நடைபெற்ற தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப்போட்டியில் உதயம் அமைப்பில் அங்கம்வகித்து, உதயம் அமைப்பில் தங்கி வாழும் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் பலர், பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களை பெற்றுள்ளார்கள்.
அதேபோல இம்முறை தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப்போட்டி 2017ல் அவர்களது பங்களிப்பு தொடர்பாகவும், இம்முறை சத்தப்பந்து விளையாட்டுப்போட்டி யாழ். நகரில் நடாத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற வடமாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் இடையிலான விழிப்புலன் பாதிக்கப்பட்டோருக்கான சத்தப்பந்து போட்டியிலும் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.